நிலாப் பெண்
நிலாப் பெண்
நானும் அவளும் தனித்திருந்தோம்!
நள்ளிர வானதும் அறியவில்லை!
வானின் மீன்கள் தொலைந்தனவே!
வார்த்தைகள் இன்றிப் பார்த்திருந்தோம்!
ஏனென் றவளை நான்கேட்டேன் “கைக்
கெட்டா தொலைவில் அமர்ந்துவிட்டாய்!
வட்ட முகத்தைத் தொடவேண்டும் ”
வாவென் றழைத்தேன் வரவில்லை!
“எட்டி நிற்பது அழகாமோ?
எனைநீ வெறுத்தல் முறையாமோ?”
கட்டி யணைக்க கைநீட்ட
கணத்தில் மறைந்தா(ய்)ள் மேகத்தில்!