அழகிய கிராமம்
விடிந்ததைச் சொல்லும்
கொக்கரக்கோ சத்தம்..
சாணம் மொழுகிய மஞ்சள் வாசலில்
அழகிய கோலம்..
தன் குஞ்சுகளோடு இரை தேடி மேயும்
கோழிகள் கூட்டம்..
பட்டியில் அடைத்த
ஆட்டு மந்தைக் கூட்டம்..
மரத்தடி நிழலில்
கயிற்றுக் கட்டில் உறக்கம்..
மரக்கிளை ஊஞ்சலில் மகிழ்ந்தாடும் குழந்தைகள்..
மாலை நேரத்து திண்ணை கதைகள்..
கொட்டை பாக்கை உரலில் இடிக்கும் மூதாட்டி..
கண்ணைப் பறிக்கும்
பசுமை வயல் வெளிகள்..
இவை அத்தனையும்
கிராமத்தில் மட்டுமே..