தமிழ்அனங்கே
வாழ்க்கைத்துணை
சின்னஞ் சிறுவயதில் எனை
சிந்திக்க வைத்த தமிழ்!
எண்ணத் திருந்த தெலாம்
எழுதிடச் சொன்ன தமிழ்!
பிள்ளைப் பருவத்தில் என்
பிதற்றலை பொறுத்த தமிழ்!
துள்ளித் திரிகையிலே என்
துணையாய் வந்த தமிழ்!
பள்ளிப் படிப்பினிலே நான்
பழகிட வந்த தமிழ்!
அள்ளிக் கொடுப்பதிலே என்
அன்னையைப் போன்ற தமிழ்!
காளை வயதினிலே நான்
காதல் செய்த தமிழ்!
நாளும் நான்மணப் பேன்
நல்ல தமிழ்அனங்கே!
வாழும் நாள் வரைக்கும் என்
வாழ்க்கை துணையிருப்பாய்!