இதுவும் கடந்து போகும்
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் அவரு ஒரு நாள் தன் சபையை கூட்டி
எல்லா புலவர்களையும் அழைச்சி
"ஐயா தமிழ்ல நெறைய நூல்கள் எழுதிருக்காங்க திருமந்திரம், திருக்குறள்,இப்டி பல நூல்கள் இருக்கு
ஆனால் மனிசனுக்கு துன்பம் வந்தா இந்த புத்தகங்கள் எல்லாம் உதவுறது இல்ல"
"மனுசனுக்கு வாழ்க்கை வெறுத்து பொய் தற்கொலை பண்ணிக்கற நிலைமை வந்தா உடனே ஒரு வரி படிச்சி அவனுக்கு அந்த தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் போகணும் அந்த மாற்றி எந்த நூல் ல இருந்தாலும் எடுத்துட்டு வாங்க,அப்டி கொண்டு வரவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் னு அறிவிச்சாரம்"....
எல்லா புலவர்களும் இதை கேட்டுட்டு சென்றுவிட்டார்கள்...........
ராஜாவின் மெய்க்காப்பாளன்," பிரபு! எதோ சபைல அறிவிஞ்சின்களே என்ன பிரபு னு?", கேட்டான்.
அதுக்கு ராஜா," அந்த விஷயத்தை பத்தி தெளிவா மெய்க்காப்பாளன் கிட்ட சொன்னாரு".
அந்த மெய்க்காப்பாளன் சிரித்துக்கொண்டே,"பிரபு இதெல்லாம் மாமுனிவர்களால் தான் செய்ய முடியும்."
ராஜா,"நீ என்ன சொல்கிறாய்," என்று கேட்டார்.
அதற்கு அந்த மெய்க்காப்பாளன்," பிரபு பெரிய ராஜா இருக்கும் பொது எனக்கு ௧௦(10 ) வயசு அப்போ வடநாட்டில் இருந்து பெரிய ரிஷிகள் மாமுனிவர் எல்லாம் வந்தாங்க,. என்ன அவங்களுக்கு பணிவிடை செய்னு சொல்லி அனுப்புனாரு......நானும் தினமும் எழுந்து வாசல் சுத்தம் செஞ்சி துணி தொவச்சி எல்லா பணிவிடையும் செஞ்சே"........
௧௫(15 ) நாட்கள் முடிஞ்சி எல்லாம் கெளம்பி போறப்ப....... மாமுனிவர் ," நன் முற்றும் துறந்தவன் னு நெனச்சேன் ஆன நீ வந்து பணிவிடை செஞ்சி தாய் பாசம் னா என்னனு புரிய வச்சிட்டே........நானும் ஆண்டி உனக்கு குடுக்க ஒண்ணுமில்ல அங்க இருக்கற பணவோலையை எடுத்து வா னு சொன்னாரு"
அதுல அந்த மாமுனிவர் எதோ எழுதினார் பின் அதை அந்த மெய்க்காப்பாளனிடம் கொடுத்து,"உனக்கு அளவு கடந்து துன்பம் வந்தா இத எடுத்து பாரு இடையில படிச்சா பயன் இல்ல னு சொல்லிட்டு கெளம்பிட்டாரு "
மெய்க்காப்பாளன்," பெரிய ராஜாவும் என்ன நல்ல வச்சிருந்தாரு நீங்களும் என்ன இப்போ நல்ல வச்சிருக்கீங்க அந்த ஓலையை எடுத்து பாக்க அவசியமே இல்லாம போகிடுச்சி"
ராஜா,"அந்த ஓலையை எடுத்து வா " என்றார். மெய்க்காப்பாளன் எடுத்து கொடுத்தான் அதை ராஜா தன்
மோதிரத்தில் வைத்துக்கொண்டார்.
௧௦(10 ) வருடம் கழிச்சி பக்கத்து நட்டு ராஜா வந்து தன் ராஜியத்தை சிதைத்து விட்டு தன் மகளான இளவரசியை சிறை பிடித்து கொண்டு சென்று விட்டான் ...
பக்கத்துக்கு நாட்டு படைகள் ராஜாவை துரத்தின ஒரு காட்டில் வெகு தூரம் சென்று பின் தன் வாழ்க்கை அழிவின் விளிம்பில் இருக்கிறது என்று நினைத்தார் அப்போது அந்த மோதிரத்தில் இருந்த ஓலை ஞாபகத்திற்கு வந்தது...........அதை எடுத்து படித்தார் அதில் "இதுவும் கடந்து போகும்"...என்று இருந்தது........
ராஜா ,"இதுவும் கடந்து போகுமா எந்த துன்பம் துயரமும் கடந்து போகுமா னு சொல்லிட்டு"
பின் ஒரு இடத்தில் அமர்ந்து இதுவும் கடந்து போகும் னு சோளியிட்டு இருந்தாராம்.........சில மணிநேரம் கழிச்சி எழுந்து பார்த்தாராம் எதிரியின் படைகள் எல்லாம் போய்விட்டதால் பின் ராஜா மெல்ல அந்த காட்டில் கொஞ்சம் நடந்தாராம் ............
காட்டில் இருந்த ஆதிவாசிகள்,"பிரபு நீங்க சாகலையா வாங்கனு சொல்லி தேர் சிம்மாசனம் எல்லாம் கொடுத்து கவனிச்சங்காலம்"
ராஜாவும் தனக்கு தெரிஞ்ச வாள் சண்டை படைகள் எல்லாம் உருவாக்கி எதிரி படையை நோக்கி சண்டை போட்டு த்ன் ராஜியத்தை கைப்பற்றினாராம்,...........
பின்பு அந்த ராஜியத்தில் ராஜாவை பூக்கள் தூவி ஆடி பாடி மக்கள் வரவேற்றார்கள்.......
அப்போது ஒரு வயதானவன் வந்து ராஜாவை அழைத்தான்.........ராஜா பார்த்தார் அது மெய்க்காப்பாளன்,"என்ன மெய்க்காப்பாள?"...என்றார்
மெய்க்காப்பாளன் கூறினான்," பிரபு ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் அளவு கடந்து துன்பம் வரும் போது மட்டும் ஓலையை பாக்கறது இல்ல அளவு கடந்த இன்பம் வந்தாலும் இத பாரு னு சொன்னாரு"
ராஜா," இப்போ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் னு " சொன்னாரு.............மெய்க்காப்பாளன்," பிரபு அப்போ ஓலையை தொறந்து படிச்சி பாருங்க", சொன்னான்...
ராஜா அந்த ஓலையை தொறந்தாரு படிச்சார் "இதுவும் கடந்து போகும்;,என்ன இதுவும் கடந்து போகுமா எந்த இன்பமும் கடந்து போகுமா",ராஜா ஆடி போய்ட்டாரு...........கிரீடத்தை எடுத்து வச்சிட்டு பணிவோடு அரண்மனைக்கு போனாரு..........
" வாழ்க்கையில இன்பமும் நிரந்தரம் இல்ல துன்பமும் நிரந்தரம் இல்ல எல்லாம் ஒரு நாள் கடந்து போகும்"...............