என் தோழி

அன்பு தந்து அரவணைத்த
கண்மணியே!............
கடன் தந்து உதவிய
மங்கையே!.............
உணவு தந்து ஊன் வளர்த்த
கார்முகிலே!..........
கண் காட்டி காப்பாற்றிய
முத்துமணியே!............
பாசம் வைத்து உறவாடிய
ஆருயிரே!.........
தவறு செய்தால் தடுத்த
பெண்மையே!..........
முயற்சி செய்தால் தட்டி கொடுத்த
தங்கமே!.....

நீ என் தோழியாக சில நேரம்!!!
என் தாயாக சில நேரம்!!!
என் தங்கையாக சில நேரம்!!!!
என் அக்காவாக சில நேரம்!!!!
என் தந்தையாக சில நேரம்!!!!
என் ஆசிரியராக சில நேரம்!!!
இருந்ததுண்டு ...........

உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை
இனி காணவும் விரும்பவில்லை!..........
உன்னோடு பழகிய நாட்கள் மீண்டும் கிடைக்குமா என்று ஏங்குகிறேன்.......
இருந்தும் உன் நட்பில் என்றும் நான் இருப்பேன்!............
என் வாழ்விலும் நீ என்றும் இருப்பாய்.......


நன்றி சொல்கிறேன் உன்னை எனக்கு வாழ்வாக வரமாக கொடுத்த இறைவனுக்கு............

எழுதியவர் : munjareen (21-Sep-18, 3:03 pm)
Tanglish : en thozhi
பார்வை : 206

மேலே