அம்மா அம்மா
என் வலிக்காக நீ அழுதாய்......
என் வெற்றிக்காக நீ போராடினாய்..........
என் சந்தோஷத்திற்காக நீ கஷ்டப்பட்டாய்........
என் பசிக்காக நீ உண்டாய்.....
என் வளர்ச்சிக்காக நீ வலியை தாங்கினாய்.......
என் நலனுக்காக நீ உழைத்தாய்.......
என் துன்பத்திற்காக நீ கடவுளிடம் சண்டை போட்டாய்.........
என் ஆசைக்களுக்காக நீ தந்தையிடம் கெஞ்சினாய்.........
என் மரியாதைக்காக நீ அவமானப்பட்டாய்......
என் வாழ்க்கைக்காக நீ உன் வாழ்வை துளைத்தாய்.......
இப்படி எனக்காக உன்னை அர்ப்பணித்த என் தாயே!.........
உனக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.......
உன்னை ஏழு ஜென்மமும் என் தாயாக வரவேண்டும் என்று கடவுளிடம் தினமும் வேண்டுகிறேன்............