காந்தியம் எனும் சத்தியம் என்றும் சாத்தியமே
அறவழி வகுத்து போரை விடுத்து
அறப்போராட்டம் தனை எடுத்து
சுதந்திர கொடியேற்றிய காந்தியத்தை
பழமையென பழிக்கும் மூடனே கேள்!
தமிழ் ஈழம் தனை காக்க
தன்னுயிர் உருக்கி உண்ணா நோன்பிருந்த
இளைஞர் போராட்டம் - அக்காலமா?
இல்லை பார் போற்றும் தன் மரபை
பாலியல் கண்ணியதோடு வென்றெடுத்த
மெரினா போராட்டம் - கட்டுக்கதையா?
அகிம்சை தனை தன் அறமாக்கிய
இன்றைய இளமை நாளைய சமூகம் அன்றோ!
வெள்ளையனை வீழ்த்தி, உரிமை கொள்ளையினை வென்ற
சத்தியாகிரகம் என்றும் சாத்தியமே - இது
மனிதம் உணர்த்தும் சத்தியமே!