உன் வரவிற்காக

அன்பே
கண்களின் வழியே கவிதையை
கொண்டுவந்து -- அதை நான்
புரிந்து படிக்கும் முன்பு
புதிராய் மறைந்து போனவளே....
மறையாத உன் பிம்பம்
என் மனதை
கறையானாக அழிக்கிறதடி!!

பேருந்தின் படியோரத்தில் நின்று
என் பிறப்பின் அர்த்தத்தை
உணர்த்தியவளே -- உன் பிம்பம்
மறையாமல் பித்தனாக அலைகிறேனடி
உன்னை பிரிந்த நாள்முதலாய்!!

உன்னை பார்த்த நாள்முதலாய்
நாட்கள் தித்தித்ததடி -- தித்தித்த
நாட்கள் கரையும் முன்னே
உன்னை தீண்டமுடியாமல்
உருவம் இழந்தேன்...

காற்றுகள் அசையும் முன்னே
இதழசைத்து வார்த்தைகளை
இசைத்தவளே -- காற்றில்
நீ விட்ட வார்த்தைளை
என் கைக்குள் அடக்கிக்கொண்டு
அடைக்கோழியாய் அடைகாக்கிறேனே...

உயிரை கட்டி இழுக்கும்
உன் கால் கொலுசில் கலந்து
கறையேற முடியாமல்
செவிகள் கிடக்குதடி -- சிணுங்கும்
ஓசையில் அதன் சிந்தனையை மறந்து!!

பார்வைகள்
தூண்டில் முள்ளென்று தெரிந்தும்
துணிந்து வர எண்ணிய எண்ணம்
என்னை மறந்து விட்டு
எங்கோ போனதடி...

கருவேலங் காட்டு
"மஞ்சள் பூவே"
நெஞ்சத்தை காயமாக்கத்தான்
முள்ளாய் நீ சிரித்தாயோ???

கை நழுவிய உன்
கைக்குட்டையை கைப்பற்றிக்கொண்டு
போகும் இடம் தெரியாமல்
"பூவே" நான் தடுமாறிகிடக்கிறேனே...

கண்ணாடி வழியே என்
காதலும் வழிய
உன்னை காண வந்தவன்
கானலாக கருகினேன் -- கண்முன்
காணத போது...


கூந்தளின் குடையில்
அடைக்கலம் கேட்க வந்தவன்
"கூந்தளின் ஈரத் துளிகளில்"
அடிமையானேனே -- அன்பே
அதை விடுவிக்க நீ வரமாட்டாயா???

"இரவுகளுக்க இரையாக்கி
கனவுகளுக்கு பலியாக்கி
கற்பனைக்கு துணையாக்கி"
கவிதை வரிகளாக காலத்தை மாற்றியவளே
கண்களால் மீண்டும் உன்னை
எப்போது காண்பேன்???

புல்லோடு பனித்துளியின் உறவு
பகல்வரை என்றிருந்தால் - உன்னோடும்
உன் நினைவோடும்
நான் உறவாட "உயிரின் பிரிவுதான்"
உண்மையான பிரிவா????

புருவ வளைவில்
புள்ளி வைத்தவளே...
பூரிப்பாய் உன்னை பார்த்ததால்
போதுமென்று தள்ளி நிற்கிறாயா???

வேண்டும்
நீ வேண்டுமென்று
நிழலோடு உன்னைக் காண ஏங்குகிறேன்

போதும்
எப்போதுமென்று
என்னை இழந்த இடம் தெரியாமல்!
நீ இருக்கும் இடத்தை தேடுகிறேன்...

வருவாயா
அருகில் வருவாய என்று
அதிகாலை பூவாக
அனுதினம் பூர்த்து உதிருகிறேன்...

காயம்
இந்த மாயமென்று
என்னை வென்றவளே...
உன்னை கொடுக்காமல்
எங்கு சென்றாய்???

தேடிக் கொண்டு
தேவை நீயென்று
தினங்களுடன் தீயாக போராடுகிறேன்...

"இரவின் அடையாளமே"
இருதயத்தின் அழியா தடமே
ஒருநாள் மலரே
மறுநாள் கனவே
இதயம் இறந்து போகும் முன்னே
இமைகளில் மறுமுறை
எனக்கென்று ஒருமுறை
"நீ"உதிப்பாய் என்றே
என் வானம் காத்துகிடக்கிறது...
உன் வரவிற்காக...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Sep-18, 7:15 pm)
Tanglish : un varavitkaaka
பார்வை : 1692

மேலே