அலை பாயும் மனதினிலே
தியானம் நல்லதாம்..
கண்களை மூடி அமர்ந்தவுடன்
கஷ்டங்கள் முன்னே ஓடிவரும்..
மனதை ஒரு முகப்படுத்த நினைத்த வேளை
வேதனைகள் இளக்காரமாய் பாடிவரும்..
வாய் மந்திரங்களைச் ஜெபிக்கிறது..
மனதோ குன்றிப்போய் கிடக்கிறது..
இது நிரந்தரமல்ல வாழ்வு சீராகும் என
ஆறுதல் நமக்கு நாமே கூறிக் கடந்தாலும்..
அதெப்பிடி உன்னைவிட்டுப் பிரிவது என்பதாய்
ஒட்டிக் கொண்டு உறவாடுது வாட்டம்..
உன்னை எனக்குத் தெரியாது என மிரட்டிப்பார்த்தும்
காது கேட்காதது போல கூடவே பயணிக்கறது குழப்பம்..
தியானம் நல்லதாம் எனக் கூறுவது தான் நன்றாக உள்ளது..
அப்படி தியானம் மன உளைச்சலின்றி செய்ய
சாமியே மனிதனாய் வந்தாலும் முடியுமா என்பது சந்தேகம்..
இவை அனைத்தும் நமக்கு நாமே ஏற்படுத்தியவையே!
இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்திருந்தால்
இத்தனை தடுமாற்றங்கள் இருந்திருக்காது..
செயற்கையாய் உருமாற்றம் ஆனபின்னே
சொதப்பல்கள் சேதாரம் அதிகமாச்சு..
அலை பாயும் மனமே..
இது தினம் கூட்டும் ரணமே..