காந்தியடிகள்
இவன்
போர்பந்தரில் பிறந்து
அகிம்சை
போர் புரிந்தவன்
அகிலத்தின் அன்பை
புரிந்தவன்
சட்டம் பயின்று
உண்மை பேசியவன்
சட்டை போடாத இவன்தான்
இந்தியாவிற்கு சட்டை போட்டவன்
சட்டம் போட்டவன்
ஆங்கிலேயன் முதுகில்
சாட்டை போட்டவன்
இவன் அணிந்த கருப்பு ஆடைதான்
விரட்டியது பல கருப்பு ஆட்டை
சாந்தியின் வழியில் செல்லும்
இளைஞர்கள் இன்று காந்தியின்
வழியில் செல்வதில்லை
ஆங்கிலேயரை எரித்த தீ காந்தி
இவான் புத்திலிபாயின் புத்திரன்
இவனால் சுதந்திரப் போராட்டம் கண்டதோ புத்துத் திறன்
இவன் ஆடையை குறைத்து அணியச் சொன்னான்
அதை நடிகையர் சரியாய்
பின்பற்றுகின்றனர்
உப்பிற்காக தண்டி சென்றதாலா
அவரை தண்டித்து கண்ணில் உப்பை வரவைத்தான் கோட்ஸே
இவன் பூகம்பம்
பிறக்கும் குஜராத் பூமியில்
பிறந்த பூ கம்பம்
இவன்
தந்திரம் செய்யாது
தன் திறத்தால்
சுதந்திரம் பெற்றவன்
அடிமைப்படுத்தி இருந்தவனிடம்
இருளில் வாங்கிக் கொடுத்தார்
விடுதலை
மனிதா
இன்னும் விடியாமல் ஊழலில்
இருக்கும் இருளிடம் இந்தியாவை
மீட்க விடு தலை
இவனின்
தடி அடிக்குப் பயன்பட்டது
யாரையும் அடிக்கப் பயன்படவில்லை
வள்ளுவனின் அடிகள்தான்
காந்தியடிகள்
அடிமை பட்ட மக்களின்
அடி மையை தன் அடி மையில்
நடந்து அழித்தவன் காந்தியடிகள்
வெள்ளையனிடமிருந்து
வெள்ளாடைக்காரனிடம்
நாட்டைக் கொடுத்தவன் இவன்தான்
அதனால் ஏழை மக்கள் இன்றும்
வெள்ளாடாய்
இவன்
ஆட்டுப்பாலை விட
அறத்துப்பாலை
அதிகம் குடித்தவன்
ஆப்பிரிக்கா சென்று
ஆங்கிலம் படித்தவன்
ஜெயந்தியை கொண்டாடும் நாம்
காந்தி ஜெயந்தியையும் கொண்டாடுவோம்
புதுவைக் குமார்