அஹிம்சைத் தென்றல்

ஆங்கிலேய ஆதிக்கத்தை
அசைத்துப் பார்த்த
அஹிம்சைத் தென்றல்...

ஆங்கிலேயரும் அதிசயித்த
அற்புதத் தலைவர்...

அகில உலகம் ஆராதிக்கும்
உதாரண புருஷர்...

இந்தியர்கள் இதயம்
கவர்ந்த மகாத்மா...

வாழ்ந்த நாட்களில்
தென் ஆப்ரிகா
கறுப்பர் இனம் காலூன்ற
அர்ப்பணித்தது
இருபத்தோரு ஆண்டுகள்...

இந்திய சுதந்திரம் மலர்ந்திட
அர்ப்பணித்தது
முப்பத்து மூன்று ஆண்டுகள்...

இவர் வழி உலகம்
பின்பற்றும் பல
நூறு ஆண்டுகள்...

இந்திய தேசத்தந்தை
அண்ணல் காந்தியடிகள்
பிறந்தநாள் இன்று...
காந்தி தேசம்
கர்வம் கொள்கிறது...

நூற்று ஐம்பதாவது
பிறந்தநாளில்
புது யுகம் ஒன்று
இனிதாய்ப் பிறக்கட்டும்...

உலகம்...
இன்னொரு வல்லரசை
இந்தியாவில் காணட்டும்...

வாழ்த்துக்கள்...
👍👏🙏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (2-Oct-18, 1:58 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 103

மேலே