நாட்குறிப்பு ஒன்று தேன் சிந்துகிறது
ஆஹா... இந்த பூலோகம்
எவ்வளவு இனிமையானது...
ஜிஸிஇ'1986
நண்பர்களின் சந்திப்பில்
இது சாத்தியமானது...
சந்தோஷம் பூர்த்தியானது...
வயசாகிக் கொண்டே போகிறது...
பார்க்கும் கண்ணாடி சொல்கிறது...
அதனாலென்ன... மனசென்னவோ
இளமையாய்த்தான் இருக்கிறது...
இந்த சுற்றுலா சொல்லியது...
பயணச்சீட்டில் ஆகாயத்தில்
பறந்து போய் வந்தது
டில்லி சுற்றுலாவிற்கு...
பயணச்சீட்டு இல்லாமலும்
மனசு பறக்கத்தானே
செய்தது சுற்றுலா முழுமைக்கும்...
ஓரிரு நண்பர்கள்
ஒன்று சேர்ந்தாலே
அது ஆனந்தம்...
நண்பர்கள் குழுவே
கூட்டமாய் ஒன்று சேர்ந்தது..
அது பேரானந்தம்...
பாட முடிந்தது
ராகங்கள் தெரியாமல்...
ஆடவும் முடிந்தது
நடனங்கள் தெரியாமல்...
ஆக்ரா பயணம் முடிந்து
புது டில்லி திரும்பிய
இரவு நேர பேருந்துப்
பயணத்தில் ஜெமோ.. சபா
மற்றும் நண்பர்களின்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசித்ததில்தானே
சுகம்... சுகம்... சுகம்...
மேரி..மீனா.. கோப்ஸ்..சிதம்பரம்..
ஆகியோரின் மகிழ்ச்சி...
ஏற்கனவே சுற்றுலா வந்து
இப்பவும் வந்தவர்களின்
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது...
குயில் ஒன்று கோம்ஸ்
பெயரில் பயணித்தது...
செவிக்கு இன்பம்
தேனமுதாய்க் கிடைத்தது...
மயில் ஒன்று சங்கரி
பெயரில் கையில் காமிரா
கொண்டு ஆடியது... அது
நண்பர்களின் சந்தோசங்களைக்
கொண்டாடியது...
வேர்களை.. விழுதுகளை
விதைகளை.. விருட்சங்களை
விழுங்கி இருக்கிறது
சுரேஷின் காமிரா... அது
பூக்களையும் சிரிப்பூக்களையும்
சேமித்து வைத்திருக்கிறது...
மந்தி ஒன்று பிருந்தாவனத்தில்
பார்வையாளர்களின்
மூக்குக் கண்ணாடிகளைக்
கழட்டி ஃப்ரூட்டி ஜூஸுக்கு
பேரம் பேசியது நீங்கா
நினைவுப் பதிவுகளில் ஒன்று...
அடக்க முடியாமல்
இயல்பாய்ச் சிரிப்பான்
நண்பன் பொன்னுசாமி...
அவனது பெட்டி கூட
அடக்க முடியாமல் சென்னை
விமான நிலையத்தில்
அழகாய்ச் சிரித்தது...
பரதனும் குமாரும் எனக்கு
டில்லி ஹோட்டல் தனீஷ்
அறை நண்பர்கள்...
எண்பதுகளின் துவக்கத்தில்தான்
பரதன் எனக்குப் பழக்கம்...
இருந்தும் எழுபதுகளில்
எனக்குப் பிடித்த பாடல்கள்
அவனுக்கும் பிடிக்கிறதே...
ஒத்த மனங்களின் அடையாளங்களில்
இதுவும் ஒன்றோ...
சிறு சிறு நிகழ்வுகளில் கூட
பெரிய நகைச்சுவை
காண்பான் நண்பன் குமார்...
திட்டமிடலில் தீர்க்கமும்
நகைச்சுவையில் விகடமும்
கொண்ட குமார்...
குழுவின் வரப்பிரசாதம்...
இவனது டைமிங் கமென்ட்ஸ்
எல்லோருக்கும் எளிதில்
வராப் பிரசாதம்...
அழகிய ஆக்ரா அரண்மனை
அதிசய தாஜ்மஹால்
பிரபல செங்கோட்டை
பிரமிக்க வைக்கும்
இந்தியா கேட்...
பார்த்து வந்ததும்
போட்டோ எடுத்து வந்ததும்
இனிமையை இனிதாய்ச்
சேர்க்கிறது இதயத்தில்...
செல்வவிநாயகம்.. ராம்..
ஆகியோரின் மும்மொழிக்
கொள்கையால் அவர்கள்
நமக்கு வெளியுறவுத்துறை
அமைச்சர்கள் ஆனார்கள்...
தமிழ்...ஹிந்தி எனும்
உளிகள் கொண்டு
சுற்றுலா சிற்பம்
அழகாய்ச் செதுக்கினார்கள்...
விஜயா.. பிரேம்.. சிவா..
லாரன்ஸ்.. வெங்கட்.. செமு..
வருகையில் சிற்பம்
அழகு பெற்றது...
பலமுறை டில்லியும்
சிலமுறை ஆக்ரா கோட்டை
எத்தனையோ கேஜி தாஜ்மஹால்
சென்று வந்த எனக்கு
எப்படிப் பயணித்தோம்
எங்கு சாப்பிட்டோம்
என்ன பேசினோம் என்பது
இப்போது முழுமையும்
நினைவில் இல்லை...
இந்த சுற்றுலா நாட்கள்
எந்த நாளும் நினைவிலிருக்கும்...
நண்பர்கள் ஓர்வழி வந்து
ஒரு மனதானதில்
இன்னொரு முறை
பதினேழு - இருபத்தொன்று
வயதுப்பருவம் வந்து போனது...
மகிழ்ச்சி மனதில் நின்று போனது...
இனிய நண்பர்களோடு
சுற்றுலா நாட்கள் எல்லாம்
வசந்த நாட்கள்...
இங்கு சேமித்த உற்சாகம்
வரும் நாட்களுக்கு
உரமாகும்.. நல் வரமாகும்...
சுற்றுலா ஏற்பாடு
செய்த நண்பர்கள்...
லிவி.. பால்.. ஜெமோ..
சுற்றுலா வந்த நண்பர்கள்...
வராமலும் வாழ்த்திய நண்பர்கள்...
பாராட்டுக்குரியவர்கள்...
நாட்குறிப்பு எழுதும்
பழக்கம் உள்ள எனக்கு
இந்த நாட்களை எழுதும்போது
என் பேனா தேன் சிந்துகிறது...
காகிதங்கள் புளகாங்கிதம்
அடைந்து மகிழ்கிறது...
இன்னுமொரு உண்டியல்
தயாராகிறது.. மற்றுமொரு
சுற்றுலா செல்வதற்கு...
நன்றி... நன்றி... நன்றி...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍🙏🙋🏻♂🌹😀