பாதம் பறக்குதே

இருட்டுர நேரம்

இருளுற மேகம்

இதுவரை பார்த்திடாத வானம்

அழகிய காலநிலை

அசைந்தாடும் மரம்

பூப்பெய்தும் பூக்கள்

கூச்சிட்ட குருவிகள்

மெய்மறந்தேன் மெய்யாலும்...

வானத்து தேவதை

வருகின்ற அறிகுறியோ?

அழகாய் நீயும்

எதிரே நானும்

பார்வைகள் பற்றிக்கொள்ள

வார்த்தைகள் முட்டிக்கொள்ள

எனை கடந்த அந்த நொடி

என் பாதமும் தரையிறங்க

கொஞ்சம் தயங்கியதே !

எழுதியவர் : குணா (23-Sep-18, 8:18 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 103

மேலே