நிம்மதி
தேடுகிறான் மனிதன் தேடுகிறான்
அதற்கு கேடிவனே செய்துவிட்டு, நிம்மதியைத்
தேடுகிறான் மனிதன் தேடுகிறான்..
வாடுகிறான் அமைதி இன்றியே..
நாடுகிறான் கடவுள் சன்னதியே..
ஓடுகிறான் பணத்தின் பின்னே
அதில் வாழவே மறக்கிறான்..
ஓடுகிறான் பாசத்தின் பின்னே
அதில் வேதனை சுமக்கிறான்..
ஓடுகிறான் உறவின் பின்னே
அதில் துரோகத்தைக் காண்கிறான்..
மிச்சமுள்ள வாழ் நாளெல்லாம்
நிம்மதியை மட்டுமே தேடுகிறான்..
தேடித்தேடி வாழ்க்கையிலே ஓடுகிறான்..
நிம்மதி தேடி சில நேரம்
படுகுழியிலும் விழுகிறான்..
நல்லவனெனில் உடன் விழித்தெழுகிறான்..
தீயவனோ அதிலும் சுகம்காண்கிறான்..
புரிந்தவன் உலகம் அறிந்தவன்
நிம்மதி இருப்பதாய் நினைத்துக்கொண்டு
கஷ்டங்கள் சுமக்கிறான் நாட்களை கடத்துகிறான்..
எத்தனையோ தேடியும் இறுதிவரை சிலருக்கு
கிடைக்காமலே போய் விடுகிறதிந்த நிம்மதி..
நிம்மதியில் மதி இருந்தும்
பலரை மதிக்காமலே இருக்கிறது நிம்மதி..
தேடலுக்குத்தான் முடிவில்லையே..
முடிந்தமட்டும் தேடிப்பார்ப்போருக்கு
நிம்மதி கிடைத்தால் நிம்மதிக்கும் நிம்மதியே!