நானும் அவனும்
காயங்களாக நான் இருக்க
மருந்தாக நீ இருந்தாய்
வண்டாக நீ இருக்க
தேனாக நான் இருந்தேன்
முள்ளாக நீ இருக்க
ரோஜாவாக நான் இருந்தேன்
கதிரவனாக நீ இருக்க
சந்திரனாக நான் இருந்தேன்
மொத்தத்தில் என்னவனாக நீ இருக்க
உன்னவளாக நான் இருப்பேன் என்றென்றும் ..!!!!!