வணங்குவோம் வ ஊ சிதம்பரனாரை
தென்னகம் கண்ட திலகரின் சீடர்
தாயகத்தின் தியாக சுடர்!
ஓட்டப்பிடாரத்தின் பிறப்போசை-பிறகு
ஓங்கிக் கொட்டிய சுதந்திர முரசை!!
ஏழை நீதி மக்கிய மண்ணில்-அறிவு
ஏர் பூட்டி வாதமெனும் காளையோடு
உழுது நீதி கண்ட உத்தமர்!!!-எம்
தொழிலல்ல வழக்குரைப்பது
தொண்டாம் ஏழைகட்கென
எடுத்துரைத்த எழைப்பங்காளர்!
அந்நிய கப்பல் மிதக்கும்-நம்
ஆழியின் அவல நிலை கண்டு...
வடக்கு நோக்கி புறப்பட்டு
வந்தால் கப்பலோடு-இல்லையேல்
வருவேன் பிணமென கடலோடு!
முழக்கமிட்ட முண்டாசுக்கவி நண்பன்!!
சுதேசி கப்பலை விட்ட
சுதந்திரத்தின் சூளுரை...
கொடுமை கண்ட தொழிலாளர்நிலையை
கொளுத்தியெரிய
கொதித்தெழுந்த மனம்!
போராட்டத்தலைமை!!
பொதுவில் கொடுத்த உம் சொத்து! நீயே
முத்துநகர் தந்த சுதந்திர முத்து!!
சிறைகண்டாய்...
செக்கிழுத்தாய்...
செந்நீர் சிந்தி கல்லுடைத்தாய்...
செல்வந்தர் வீட்டு சிதம்பரமே!
இளமைக்காலமதை இறையாக்கினாய்
இந்திய விடுதலை பசி கண்டு!
வறுமையில் வாழ்வு கண்டாய்...
பொறுமையுடன் பூக்கும் சுதந்திரமென!
மறைந்த உமக்கு
மலர்வளையமே சுதந்திரம்!!!
#ஜெய்ஹிந்த்