வெடியால் விடியும் வாழ்க்கை

வானத்தில் மலரும்
வண்ணப்பூக்களை
வார்க்கும் வர்க்கம்!
ஓர் நாள் ஒளிக்க...
ஓராண்டு உழைப்பு...
ஆபத்தின் ஆழமதை அறியாமல் அல்ல!
ஆசைமகன் நாளெழுத்தை அறியவே!!
அலுமினியம் நிறைந்த கைகள்...
அன்பு மகன் வயிறு நிறையவே!
வெடி மருந்துகளோடு வாழ்க்கை...
திருநாளில் ஒளிரும் வெடியோ! அங்கே
திணையளவு ஒளிர்ந்தால்...
ஆலையோரம் ஆலமரக்கிளை...
தொட்டிலில் தூங்கு மகனே!
ஓடுகிறேன் உன்தாய்-ஆலை மணி
ஓசைக்கேட்டு-பனை
ஓலைவெடி மடிப்பேன்! பள்ளி
சாலை நீ ஓடிடவே!!
கல்லூரி காலம் காண
கைசிவக்க கம்பியில்
கந்தக மருந்திடுவேன்!
பட்டங்களை நீ சுமக்க...
பட்டாசு சுமந்து திரிவேன்!
உயிரை வைத்து உழைக்கிறேன்! என்
உயிரான நீ பிழைக்கவே!!
சிதறிகிடந்தோரை கண்ட
சூழ்நிலையும் வந்தது! மனம் சிதறவில்லை!!
சிறப்பான சிற்பமென-உம் எதிர்காலத்தை செதுக்கிடவே!!
ஆபத்துக்களால் அரணமைப்பட்ட உம்
அன்னையின் ஆலை வாழ்க்கை!
அர்ப்பணமே ஆசைமகனே!!
#ஆதரிப்போம்_சிவகாசி_பட்டாசுகளை!

எழுதியவர் : நடராஜன் அச்சுமல்லையன் (25-Sep-18, 10:58 pm)
பார்வை : 86

மேலே