ஆசிரியர் தினம்
அறியாமை நிலத்தில்
அறிவை விதைத்து...
அ வென்ற எழுத்தில் தொடங்கி
அனைத்து துறையினரையும்
வடிவமைக்கும் சிற்பி!
கற்ற அறிவை
காலமெல்லாம்-அறியாமை
காரிருள் அகற்றும் ஒளியெனக்கொண்டு
பல்லாயிரம் மாணவர்களை
படைத்தலே தம்மை படைத்ததன்
நோக்கமென எண்ணி...கல்வியை
காக்கும் பள்ளிச்சாலை பயணம்!
என் மன எண்ணங்களை
எழுச்சிமிகு வரிகளாய்-எழுத
தமிழ் தந்த பல
தன்னலமற்ற ஆசான்களையும்...
அறிவைத்தந்த அத்துணை
ஆசிரியர்களையும் வணங்குகிறேன்!