பெண்ணின் பார்வை

பெண்ணே, உந்தன் விழிகளின் பார்வையில் நீ
பூட்டி வைத்திருக்கும் விநோதங்கள் ...........
எத்தனை, எத்தனையோ........
காதல் கதைப்பேசும் பார்வை
காவியம் பாடும் பார்வை
கவிதையாய்ப் பாடும் பார்வை
நவரசங்கள் தரும் பார்வை
அவற்றில் நான் அப்போதைக்கப்போது
உன்னோடு பழகும்போதெல்லாம்
காணும் ரசங்களுக்கு ஓர் நாடக
அரங்கல்லவோ வேண்டும் ............
இத்தனையும் பெரிதல்ல , ஆனால்
உந்தன் பார்வை தரும் அன்பு பார்வை
அந்த அன்பு பார்வைக்கிணை வேறிலையே
வையகத்தில்.........
அந்த அன்னையின் பார்வை .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Sep-18, 3:40 am)
Tanglish : pennin parvai
பார்வை : 337

மேலே