இறைவன் பகைவன்
என் மனதில் கொண்ட வலி
ரணமாய் கொள்ளுதடி
மனம் விட்டு சொல்ல வார்த்தையில்லை
நீ இருக்கும் நிலைமையை காண்பதே
கண்ணீருக்கான பெரும் துயரமாய் போகிறது
காயத்தினை மட்டும் நீ ஏற்றுக்கொண்டாய்
வலிகளால் நான் வாடுகிறேன்
என்ன தான் செய்வேனோ
உள்ளுக்குள் அழுது அழுது
கண்ணீர் கல்லறையாகிறேன் அன்பே
உன் புன்னகை
உன் பூவிதழ் இடும் சத்தம்
உன் அழகிய குறும்பு
சண்டை
கோபம்
சிணுங்கல்
உன் ராச்சத அன்பு
மீண்டும் இவை வேண்டும்
நீ மீண்டுவர வேண்டும்
இறைவன் பகைவன்!!..