காதல் வசப்படும்

மழை நின்ற காற்றைப் போல்
எனைச் சிலிர்க்க வைத்தாளே!

திசை மாறியப் பறவைப் போல்
எனை இழுத்துச் சென்றாளே!

கைகள் இன்றி கதவைத் தட்டும்
சப்தமில்லா மூச்சைப் போல்!
எனக்குள் ஒளிந்து கொண்டாளே!

கடல்மேல் மெத்தைப் போல்
அலை மோதிச் சென்றாளே!

தொடுவானம் மேகம்போல்
எனைக் கடந்து சென்றாளே!

அடியே.......

உன் செவ்விதழ் நாளிதழில்
தினம் படிக்க வருவேனே!

உன் பார்வைத் தீண்டாமல்
நிழல் பின்னே வருவேனே!

அவள் கண்களிலே கவிதை
மழை காணக் கண்டேனே!

இமைகள் கொண்டு குடை விரித்து
துளியாக சேகரிப்பேன்!

தங்கப் பதுமை போலே இவள்
நெஞ்சில் ஊஞ்சலாடிப்போனாளோ!

தவம் இன்றி வரம்போலே
தடுமாறிப்போனேனோ!

பாஷையில்லா மொழியைப் போல்
ஊமையாகி நின்றேனோ!

இதயம் ஒரு கணம் கணப்பதுபோல்
சுவடுகள் இன்றி மறைந்தாயே!

தொடுவானம் மேகம் போலே
தூது செல்ல வாராயோ!

அடி பெண்ணே! உன்

செந்தமிழ் சிரிப்பினைக் கண்டு
இலக்கணம் மறந்திட கண்டேன்!

தாய்மடி தவழ்ந்திட கண்டு
தாவணிப் பின்னே ஒளிந்தேன்!

உனைத் தொட்டதும்
தாகம் தணிந்திடும்
இவள் காணல் நீரோ !
பெண்ணே வா...வா....!!

எழுதியவர் : கவிதாயினி செ.மேகலாதேவி (30-Sep-18, 5:41 pm)
Tanglish : kaadhal vasapadum
பார்வை : 503

மேலே