பிரிந்த போன

முதன் முதல்
உன்னை பிரிந்த
போது ...
சொன்னது இதயம்
உன் மேல் நான்
கொண்ட காதலை..

நீ இல்லாத
இந்த நொடி...
நீ என்னோடு
இருந்து நொடிகளை
மீட்டிப்பார்த்து
பொறாமைப்படுகிறது..

மீளாத அந்த
நொடிகள்..
உன் காதலை
சொன்ன போது..
பூட்டு போட்டிருந்த
என் இதயம்...


இப்போது திறக்கிறது
காதல் கொண்டு...
விழி நீர்
வழிகிறது..காதலே
புரிந்தபோது நீ
மறைந்து விட்டாய்..

எழுதியவர் : (3-Oct-18, 12:13 am)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
பார்வை : 145

மேலே