அவன்-அவள் காதலில் கவனம் தேவை
பார்வையில் வந்த பரிச்சயம் அவன், அவளுக்கு;
அது நட்பாய் மாறி காதலானது -அப்போது
ஒரு நாள் அவன் அவள் பக்கம் நெருங்கி வந்தான்
பெண்ணே நீ அழகிதான் இல்லை என்று கூறவில்லை
இருந்தும் உன் மேனியில் பொன் நகை ஏதுமில்லையே ஏன்
என்று வினவ, அவள் சொன்னாள்,'அன்பே என் நகை
எல்லாம் தாளாய் இருக்க நீ என்னில் காண்பது புன்னகையே
என்றாள்... புரியாது அவன் விழிக்க அவள் மீண்டும்
சொன்னாள்,' என் பொன்நகை இப்போது 'வங்கியில்
தங்க பாண்ட்' என்று கூறி,அவன் முகம் பார்க்க அதில்
முதல் முறையாய் புன்னகை தவழ, பெண்ணவள்
இப்போது புரிந்துகொண்டாள், காதலன் தன்னை
விரும்பவில்லை, தன் பொன்னை மட்டுமே என்று
இங்கிதமாய், பின் தப்பிவிட்டாள் அவன் பிடியிலிருந்து
புலியின் பிடியிலிருந்து தப்பி ஓடியது புள்ளிமான்