உச்சிக்குழியில் ஓர் தவம்

இல்லா மொழிகள் கொண்டு உன்னைக் கொஞ்சி மகிழ்கிறேன்! அனைற்றையும் புரிந்தவனாய்
'உம்' கொட்டி
தோளில் முட்டி
இதழ் முகிழ்கிறாய்!
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கைகள் ஆட்டி
கால்கள் ஓட்டி
நீ பார்க்கும் பார்வையில்
விழுந்து நனைய
கார்முகில்கள் யாவும்
உன் உச்சிக்குழியில்
தவம் செய்கின்றன!!!

எழுதியவர் : முகவை சௌந்தர் (3-Oct-18, 3:46 pm)
பார்வை : 913

மேலே