விவாதமேடை

இன்று புலனத்திலும், தொலைக்காட்சியிலும் நிகழும் *விவாதமேடை* எதுவாயினும் அது பெரும்பாலும் சங்கடத்துள்ளாக்கி விடுகிறது. காரசாரமான விவாதத்தில் "எங்கே கைகலப்பு" நிகழ்ந்து விடுமே என்கிற அச்சமும் எழுகிறது. சிலசமயம், கேள்விகேட்க வேண்டுமென்பதற்காக மற்றொருவர் மேல் ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அள்ளி அடுக்குகின்றனர் பங்கேற்க வருவோர்.
*விவாத மேடை*
================
ஏதாவ தொன்றெழுதத் தெரிந்து கொண்டு
..........எல்லாமும் நாமறிவோம் எனவும் கொண்டு
தீதாகும் சொல்லென்று தெரிந்தி டாமல்
..........தீங்கிழைக்கும் என்றறியாத் தமிழில் திட்டி
பாதகமாய் வார்த்தைகளைப் பரவ விட்டே
..........பல்லோரை வம்பாலே பகையாய் ஆக்கி
ஆதாரம் இல்லாமல் அனைத்தும் சொல்ல
..........அதுதானே *விவாதமேடை* அறிவீர் நீங்கள்.!
==========================
காய் = காய் = புளிமா = தேமா
==========================
எண்சீர் விருத்தம்
பெருவை பார்த்தசாரதி