புத்தகம்
உன்னை
புரட்டி புரட்டி
என்னை
சீர்படுத்தி கொண்டேன்
உன் உடம்பில்
வரி வரியை சாட்டையடி
காயங்களோ
என்
நெஞ்சில் ஆறாமல்
இருந்த
இடத்தில் விருந்து
படைப்பாய்
விரும்பி அருந்த
இடைவிடாது
துடிக்கும் மனசு...
உன்னை
காண
என் கண்கள்
ஏங்கும்
தொட்டுவிட்டால்
தாங்காமல்
சில
நேரங்களில்
தூங்காமல்
உன்னையே
இரசிக்கும்...
விழிகள்
அறியாது கைகள்
தழுவும்
தொட்டு தொட்டு
மெய் முழுதும்,
ரசனையில்
வர்ணிக்க சொற்களை
நாட வேண்டும்
உன்னிடமே
உன்னில்
சரணடைந்தால்
உலகம்
என்
காலடியில்
நேரத்தை
செலவு
செய்யும் கல்வி
பெட்டகமே
அதிலும் பல வரவு
உண்டு
அறிவு
நற்குணமே
பல இருண்ட வீட்டிற்கு
ஒளி தந்த
புத்தி பொக்கிஷமே
உழைப்பினும் மிகுந்த
அறிவை
போதித்த
நூற்களஞ்சியமே
உனை
போற்றி புகழ்ந்திட
வார்த்தை தேடிட
மீண்டும்
உன்னிடம் வந்து
நிற்கனுமே
ஒவ்வொரு முறையும்
புதிய அகத்தை கொண்டுள்ளாதால்
நீ
புத்தகம்
ஆனாயோ...