பேனா
பேனா.....
முகம்
தாழ்த்தி
மொழி பேசும்
முதிர்கன்னி
எவர் கையில்
தொடும் போதும் அவர்
சொற்படி
தான் ஆடும்
மோகமுள் உண்டு...
காகிதத்தில்
காதல் கொண்டு
முத்தங்கள்
பதித்ததுண்டு...
சில நேரங்களில்
இதழ் பட்டு
காகிதமும்
கிழிந்ததுண்டு...
என்
கழுத்தை
பிடித்து கையெழுத்து
போடுவாரை தட்டி கேட்க
என்னால் இயலவில்லை
அவர் தவறே
செய்தாலும்...
சில
நேரங்களில்
என் கண்ணில் இரத்தம்
சிந்தும்
இந்த மாணவர்கள் எடுக்கும்
மதிப்பெண்கள் கண்டு...
சில
நல்ல கைகளில்
தவழும் போது
தட்டிக் கேட்கும்
தைரியமும் உண்டு
பத்திரிகை வாயிலாக...
சில
ஏமாற்றுகார்களின்
சாட்சியாகும்
சந்தர்ப்பமும்
அமையும்
கையெழுத்து மூலமாக...
என்
மேனி கவிஞர் கையிலே
உறவாடும் போது
உறக்கமும் கொள்வேன்
அவர்கள் வார்தைகளை
தேடும் போது...
வருத்தமும் வருவது
உண்டு
என்னை பயன்படுத்தி
எறியும் போது....