தரவு கொச்சகக் கலிப்பா=நவராத்திரி

நவராத்திரி
=============
பெண்களுக்கே உரித்தான பெருமைமிகு விழாவாகும்.!
……….கண்குளிரக் காட்சிதரும் கொலுப்பொம்மை வண்ணமுடன்.!
எண்களாக வரிசையிலே இயற்கையாக வீற்றிருக்கும்.!
……….எண்ணற்ற பொம்மைகளும் எவ்வளவு அழகுபாரீர்.!
தோள்முழுதும் சுமக்கின்ற தொழிலாளர் விற்பனையில்
……….தாள்சுற்றிப் பொம்மைகளைத் தன்தலையில் சுமப்பாரே.!
ஆள்சேர்த்து வழிபடவும் அன்பான வரவேற்பில்..
……….நாள்முழுதும் மகிழவரும் நவராத்ரி ஒன்பதுநாள்.!
திண்டாடி பொம்மைவைக்கத் திணரடிக்கும் வேலைதானே.!
……….கொண்டாட்டம் அதிலுண்டு களைப்பெல்லாம் மறந்துபோகும்
பெண்களுடன் குழந்தைகளும் பெருமையுடன் குதூகலிக்க..
……….சுண்டலில்லா நவராத்ரி சுகமிலாமல் செய்துவிடும்.!
==========================
தரவு கொச்சகக் கலிப்பா
==========================