தூரிகை பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
இளங் கதிர்கள்
பூமி தொடும் காலம்
நீல வானம்
மேனியெல்லாம் சிவந்து
வெட்கபடும் வேளை
கண்னுக்குள் இருப்பவள்
கண்ணாக இருப்பவள்
கண்மையிட்டு வருபவள்
மஞ்சல் முகதில் சாந்திட்டவள்
தாவணி அணிந்து
கண்டவருக்குள் கலவரம் செய்பவள்
விரித்த கூந்தல் வாசம்
தெருவெல்லாம் மணக்க
பூ வைத்தவள்
பூக்கோலம் இடும் காலை நேரம்
மெல்லிய கோடுகள் இடும் அவை
விரல்களா தூரிகையா?
வரைந்த விரல் கொண்டு
சுன்டிவிடு பெண்ணே
வென்மைக் கோலம் சிவந்து
வண்ணப் பூக்கோலமாகும்
தேனெடுக்கவே வருகிறதே
தேனீக்கள்
நீ இட்ட பூ கோலத்தில்
உன் மஞ்சல் முகம் பார்த்து செல்ல
ஹெல்மெட்குல் காத்திருக்கடி என் விழிகள்
எதிர் வீட்டு பெண்ணே
உன்னை எதிர் பார்த்து நின்னே
அலுவலக நேரமும் தினம் தாமதமடி
கோலம் போட்டவளே
உன்னுடன் மணகோலம் போட
மனம் ஏங்குதே
தீபாவளியோ
பொங்களோ
தினமும் இந்த
பண்டிகை நாட்கள் வராதா
அமுதே
நீ இரவு நிலவொளியில்
கொலமிடும்
அதிலும்
வண்ணக் கோலமிடும் அழகை
தினம் ரசித்து திளைக்க