நான் பார்த்த நிலாக்கள்

நான் பார்த்த நிலாக்கள்

அம்மாவின் பொட்டு
அப்பாவின் சட்டை பொத்தான்
அண்ணாவின் பந்து
அக்காவின் வளையல்
காலையில் தோசை
அதைத்தாங்கும் தட்டு
மெய்யெழுத்தின் மேற்புள்ளி
கல்லெறிந்த குளம்
அடடே இதென்ன
கண்ணாடியில்
நான்

எழுதியவர் : மேதினி (என் மகள்) (4-Oct-18, 10:50 pm)
பார்வை : 117

மேலே