விடுவாய் வாழுகிறாய்

விதியின் வஞ்சம்
விடுமோகொஞ்சம்
விண்ணைவெல்லும்
வீரமிருந்தும்
விட்டுவிட்டேனுன்னை
விரும்பிவிடுத்த விண்ணப்பமதை
விழியில் வெறுத்தாய்
வீணென வார்த்தையில் வதைத்தாய்
வலியின் வலிமை
விழியில் வழிய
விதியின் வழியென
விட்டு விலகி
வீதியில் விரைந்தேன்
விடலை வயதுனது
விட்டுவிடுவென வீட்டார்
விட்டு வந்தேன்
வருடங்கள் வாழ்ந்தும்
விடுவாய் வாழுகிறாய்