நீதிக்குப் பின் பாசம் சிறுகதை

நீதிக்குப் பின் பாசம்
ஒரு ஊரில் நீதி வழுவா மன்னன் ஆடசி புரிந்தான்
அவனுக்கு ஒரேயொரு மைந்தன் . அவனை மிக அறிவாளியாகவும் அருமையாகவும் செல்லமாகவும்
அரசன் வளர்த்து வந்தான் , அரசனின் புதல்வனும் தன் தந்தையின் சொற்படி நீதியோடும் நேர்மையோடும் வளர்ந்துவந்தான் .
இவ்வாறு நெறிதவறாது ஆட்சியில் மன்னன் ஆண்டு வந்தான்
ஒருநாள் அரசனின் மகன் தேரில் வலம் வந்து கொண்டிருந்தான். மைந்தன் அந்தநேரத்தில் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டான் , ஊர் மக்கள் அவனை வீதியோரத்தில் நின்று ரசித்தபடி கரகோஷத்துடன் அளவற்ற மகிழ்வுடன் வேடிக்கை பார்த்தனர் .

அவ்வூர் மன்னனிடம் அளவற்ற நீதி இருந்தது. அவ்வூரில் ஏதேனும் குழப்பங்கள் , கஸ்டங்கள், துயரங்கள் ஏற்பட்டால் அரண்மனை வாயிலில் இருக்கும் மிகப் பெரிய மணியை எவராயினும் அடித்து அரசனுக்கு அறிவிக்க வேண்டும் ,
அரசனின் மைந்தன் தேரில் வலம் வந்தபோது அவனது தேர்க் காலில் இளங்கன்று ஓன்று தெரியாமல்
சிக்கி இறந்து போனது , உடனே அக் கன்றின் தாய்ப் பசு அலறி அடித்து அங்கும் இங்கும் ஓடியது செய்வதறியாது திகைத்தது , உடனே அரண்மனை வாயிலில் இருக்கும் மணியை தன் கொம்பினால்
அடித்து மன்னனுக்கு அறிவித்தது
. மணிச்சத்தம் மன்னன் காதில் கேட்டது . மன்னன் வெளியில் வந்து பார்த்தபோது
நடந்தது என்னவென்று பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டான்

அத் தாய்ப் பசுவின் அலறல் மன்னன் மனதை நெகிழ வைத்தது ,
இவன் நீதி வழுவா மன்னன் அல்லவா, உடனே அமைச்சர்கள் கூட்டம் அவசரமாகக் கூட்டபட்டது .
மன்னனால் தாங்கி கொள்ள முடியவில்லை , உடனே அத்தாய்ப் பசு படும் வேதனை நானும் அடைய வேண்டும் , அப்போதுதான் என் நீதியை நிலைநாட்டிட முடியும்,
என்னால் இந்நாட்டு மக்களுக்கோ நாட்டிற்கோ உயிரினங்களுக்கோ தீங்கு இழைக்காது காத்திட வேண்டும் என எண்ணிய மன்னன்
தன் மகனையும் அதே தேர்க்காலில் சிக்கவைத்து துடிதுடிக்க கொன்றான்.
தன் நீதியை இப்படி நிலைநாட்டினான் நீதிவழுவா செங்கோல் மன்னன் .
இதுதான் நீதிக்குப் பின் பாசம் என்பதை உலகறிய செய்தான்.

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Oct-18, 10:51 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 323

மேலே