முதல் காதல்

எழுத்து நண்பர்கள் அனைவர்க்கும் எனது அன்பு வணக்கங்கள். இது எனது முதல் முயற்சி தவறு இருந்தால் பொறுத்து கொள்ளவும்.

நம்ம ஹீரோ பெயர் கிஷோர், தேவையான உயரம், மாநிறம், சற்று கலைந்த கேசம்
இதழோடு ஒட்டிப்பிறந்த புன்னகை என ஆண்மை தொனிக்கும் ஒரு இளைஞன். மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரியின் ஒரு பாகமான கூடலூரில் வசிப்பவன். அது மழைக்காலம் என்பதால் அன்று மாலை அடர் மழைக்கு பின் சிறு தூறலோடு வானம் இயற்கை எழிலோடு இணைந்திருந்தது, மேகங்கள் குளிர் காற்றோடு உரசி பயணித்து கொண்டிருந்தது, நம்ம ஹீரோ சார் கைபேசியில் முகப்புத்தகம் பார்த்தவாறே நீர் நிறைத்த சாலைகளில் மெதுவாக நடைபயில்கிறான்.

சிறு தொலைவு சென்ற பிறகு அவன் செல்லும் சாலையோடு இணைகிறது அந்த சிறு பாதை, இரு புறமும் செம்பருத்தி செடிகளால் வேலி அமைக்கப்பட்டு சற்று வெளிச்சம் குறைவாகவே காணப்பட்டது அந்த சிறிய பாதை. கருப்பு வெள்ளை சுடிதாரில் யாரோ தன்னை நோக்கி வர ஒரு நொடி பார்வையில் கடந்து சென்றான் கிஷோர். ஏனோ இதயம் வேகமாய் துடிக்க தன்னை சுதாரித்து கொண்டு மேலும் தன் வேகத்தை குறைத்து அவள் முகம் காண எத்தனித்தான். அவள் அவனை கடக்கும் நொடியில் அவள் முகம் பார்க்க நினைத்து தோற்று போனான். பிறகு அவளின் பின்னே நடந்து செல்கிறான், ஈரம் சொட்டும் நீண்ட கூந்தல், பூமிக்கு வலிக்காமல் நடையிடும் பாதம் என ரசித்தவாறே செல்கிறான். முகப்புத்தகத்தில் மூழ்கி கிடந்தவன் அவள் முகம் பார்க்க ஏங்கி தவிக்கிறான்.

சாலை ஓர கோவிலை கடக்கும் தருணம் சில நொடிகள் கோவிலினுள் இருக்கும் முருகனிடம் நலம் விசாரிக்க அவள் நிற்க அவளின் முன்னே சற்று நகர்ந்து செல்கிறான் கிஷோர், அவள் விழி மூடி பிரதிக்க, முன்ஜென்ம பாந்தமாய் அவளின் முகம் அவனுள் பதிந்தது, பிரார்த்தனை முடிந்து திறந்த விழிகளின் ஓரம் சிக்கி கொண்டு தவித்தது கிஷோரின் இதயம்.

பிரார்த்தனை முடித்து பயணத்தை தொடர எத்தனித்த அவள் சற்று அதிர்ந்து தன் போனால் தன்னை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் கிஷோரை பார்த்து. பாதை வெறிச்சோடி கிடைக்க சிறு கலக்கம் இருந்த போதும் தைரியத்தை தன்னுள் வரவழைத்துக் கொண்டு நடந்தாள். அவனை கடக்கும் நோக்கில் சற்று வேகமாய் நடக்க அவனை கடக்கும் அந்த நொடி சற்று பயமாக தான் இருந்தது. இருந்தும் கடந்து சென்றாள், அவள் கிஷோரை கடந்த அடுத்த நொடி " ஹலோ" என்று அழைத்தான் கிஷோர், என்ன என்ற பார்வையோடு தன்னை நோக்கி பார்த்தவளின் பார்வையை கண்ணோடு கண் நோக்கமுடியாமல் சற்று தள்ளாடிதான் போனான் கிஷோர், தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் உங்கள் பெயர் என்ன என்று கேட்டான் சற்றே புருவம் உயர்த்தி எதற்காக கூற வேண்டும் என்பது போல் பார்த்து விட்டு விலகி நடந்தாள் அவனின் தேவதை.

அந்த விலகலை கூட ஏற்க முடியாத நிலையில் பின் தொடர்ந்தான் கிஷோர், தன்னை அறிமுகம் செய்து கொண்டான் என் பெயர் கிஷோர் என்று கூறினான், சிறு புன்னகையோடு அவள் அவனை பார்க்க ப்ளீஸ் உங்க பெயர் சொல்லுங்க என்றான் அவளும் தன் பெயரை கூறினால் யாழினி என்று அவள் கூறிய அடுத்த நொடியே அவளின் பெயரோடு தன் பெயரை இணைத்து மனதிற்குள்ளே உச்சரித்தான் "யாழினி கிஷோர் குமார்" எங்கோ அவனை மிதக்க செய்தது அந்த உணர்வு, சிறு புன்னகை தழுவ அவளை நோக்கி எனக்கு உங்களை பிடித்திருக்கிறது i mean I LOVE YOU என்றான்.

பார்த்த கால் மணி நேரத்தில் காதலா என்று சற்று முறைத்தபடியே கேட்டல் யாழினி, கண்டதும் காதல் இதுதானா ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றால், ஏன் என்பது போல் அவன் பார்க்க சரி என்னை பற்றி உனக்கு என்ன தெரியும் எனது குடும்பம், படிப்பு, லட்சியம், செல்வம், ஏதாவது தெரியுமா இல்லை என் குணநலன், ஒழுக்கம் பற்றி எதாவது தெரியுமா என கேட்க சற்று யோசித்த பிறகு தன் பதிலை அவள் இருவிழி பார்த்து கூற துவங்கினான்.

ஆம் உன் குடும்பம் பற்றி எனக்கு தெரியாது உன் தாய் தந்தை என்னை எப்படி பார்த்துக்கொள்வார்கள் என்பது கூட தெரியாது ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் அவர்களை என் இன்னொரு பெற்றோராய் பார்த்துக்கொள்வேன், நீ என்ன படித்திருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது ஆனால் ஒன்று மட்டும் உறுதி ஒவ்வொரு நொடியும் நான் உன்னை படிக்க தவறமாட்டேன், உன் லட்சியம் மற்றும் ஆசை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் உன் ஆசையை நிறைவேற்றுவதே இனி என் லட்சியமாக இருக்கும், நான் ஒரு போதும் பணத்தை செல்வமாக நினைத்ததில்லை எனவே அதை பற்றி எனக்கு கவலை இல்லை, பூமியே நோகாமல் நடக்கும் உன் குணமும் ஒழுக்கமும் என்றுமே கேள்விக்குரியவை இல்லை. இப்போது சொல் வேறு ஏதேனும் கேள்வி இருக்கிறதா? என்று முடித்தான் தன் பதிலை கிஷோர்.

கிஷோரின் பதிலில் தன்னிலை தவறி சற்று திக்கி திக்கி தான் பேசினால் யாழினி, ஆம் ஒரு கேள்வி இருக்கிறது அது உங்களிடம் கேட்க அல்ல அந்த இறைவனிடம் கேட்பதற்கு, வினா நிறைந்த பார்வையில் கிஷோர் பார்க்க யாழினி கூறினால் ஏன் உண்மை காதலை சுமக்கும் இதயத்தை எப்போதும் ஏமாற்றுகிறாய் என்பதுதான் அந்த கேள்வி? சற்றும் எதிர்பாரத கிஷோர் உள்ளுக்குள் நொறுங்கி போனான், இருந்தும் புரியாத விடயமாக விலகி நடந்த யாழினியின் முன் நின்றான் ஏன் என் காதலை நிராகரிக்கிறீர்கள் என்று தழுதழுத்த குரலில் கேட்டான், ஏனெனில் என் உள்ளம் அவனுக்கு மட்டுமே சொந்தம் என்றாள். மேலும் உடைந்து போன கிஷோரின் வழியை கண்கள் கண்ணீரால் வரைந்துக் கொண்டிருந்தது.

எனில் அந்த கேள்விக்கு என்ன அர்த்தம் "ஏன் உண்மை காதலை சுமக்கும் இதயத்தை எப்போதும் ஏமாற்றுகிறாய்" கூறுங்கள் இது எனக்கானதா இல்லை என்று அவள் விழிகளோடு தன் பார்வையை பதித்தான் கிஷோர். ஆம் இது எனக்கும் பொருந்தும் கிஷோர், என்று தன் காதலை கூற துவங்கினால் யாழினி.

நிகழ்வுகள் ஏதும் இன்றி தன் நினைவுகளை மனதில் புதைத்து தன் காதலின் ஆழம் மட்டும் கூறினால் அவனிடம் என் காதலை அவரிடம் உரைக்க மூன்று வார்தைகள் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை அவர் என் காதல் மட்டும் அல்ல நான் ரசிக்கும் மழைத்துளி முதல் இன்று நான் வெறுக்கும் என் கண்ணீர் துளி வரை எல்லாமும் எல்லாமும் அவர் தான். நான் வாழ்வதும் வள போவதும் ஏன் என் மரணம் கூட அவருக்காக தான். நான் முதலில் காதலித்து அவரின் காதலை தான் இப்போது அவர் மீதான என் காதலை நேசிப்பதற்காகவே அவரை நினைவுகளை சுவாசித்து வாழ்கிறேன். அடுத்த பிறவியில் அவரோடு வாழ்வேன் என்ற நம்பிக்கையில் இந்த பிறவியில் அவரின் நினைவோடு வாழ்கிறேன், என்று தான் காதலை கூறி முடித்த யாழினியிடம் மை தீட்டிய கருவிழிகள் தான் ஆண்களை கவரும் என்று படித்ததுண்டு ஆனால் நான் என் முதல் காதலை சந்தித்தது உன் கலங்கிய இந்த இருவிழிகளில் தான், என்று கூறி அவள் காதலை சுமந்தபடி அவன் செல்ல தான் காதலின் நினைவை மட்டும் கண்ணீரில் வளர்த்தப்படி செல்கிறாள் யாழினி.

அரைமணி நேர சந்திப்பு தான் இருந்தபோதும் மறக்க முடிய நினைவுகளை சுமந்த படி பிரிந்தனர் கிஷோரும் யாழினியும்.

நன்றி........

- சோட்டு வேதா.

எழுதியவர் : சோட்டு வேதா (5-Oct-18, 3:31 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 613

மேலே