விடியல்

.......... *விடியல்* ..........

கருக்கள் விடியும் போதே
உருக்கள் தெரிகிறது
கிறுக்கள் தெளியும் போதே
வரிகள் புரிகிறது
ஞாயிறு புலறும்போதே
திங்கள் மறைகிறது
இருட்டது விலகும் போதே
உறக்கம் களைகிறது
பொழுது புலறும்போதே
புவிஉயிர் இயங்குகிறது
வானம் வெளுக்கும் போதே
வண்ணம் கண் உணர்கிறது
க.செல்வராசு..

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

எழுதியவர் : க.செல்வராசு (6-Oct-18, 8:21 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vidiyal
பார்வை : 279

மேலே