மிச்சத்தை மீட்போம்

அச்சத்தை விடுவோம்
மிச்சத்தை மீட்போம்
உச்சத்தை தொடுவோம்

நதி யோரம் போனால்
சதி சுவர் குறுக்கே நிற்க
விதி வந்து விளையாடும்
மைதானம் ஆனதுவோ

கச்சத்தீவு கைமாறியது போல்
சொச்சத்தையேனும் தவறவிடாது
எச்சரிக்கையாய் வழிப்புறுவோம்

பச்சை தண்ணீரும் கைமாறிடாது
தண்ணீர் சர்ச்சையை தளர்த்திட்டு
மிச்சத்தை யேனும் மீட்போம் மாக

தூண்களின் இடையே ஓடிய நீரின்
அலையோசையை நிறைவுற்று
ஓலமிடுகிறது பாலங்கள் யாவும்

உயிரினங்கள் யாவுமே இன்று
நதியை தேடி வருவதில்லை
நிலமாகிடுமோ அச்சம் வேறு
நிலை மாறும் முன்னே துரிதமாக
மிச்சத்தை மீட்போம் ஒருங்காகி
°°°°°°°
மிச்சத்தை மீட்போம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய கவிதை தினமணி கவிதைமணியில்
நன்றி: தினமணி கவிதைமணி
இருப்பது : மும்பை - மகாராஷ்டிரா

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (6-Oct-18, 2:01 pm)
பார்வை : 101

மேலே