அழகி
அந்தி மங்கும் ஆதவனில்
மஞ்சல் எடுத்து
மேகத்தை நனைத்தாற் பாேல
அவள் மேனியும்
கார் மேகத்திடம் கருமை வாங்கி வர்ணம் பூசினாற் போல
இடை வரை நீளும் அவள் கூந்தல்
விழிகள் மயக்கும் வைரத்தை பாேல பார்ப்போரை
மயக்கிடும் அவள் விழிகள்
ஆதாரம் இன்றி காற்றில் ஆடிடும் நாணற் புல் பாேல
அசைந்திடும்அவளது இடையும்
சில நாெடிகளில் தாேன்றி சென்றிடும் மின்னல் பாேல
அவள் வீசீச் செல்கின்ற அவள் பார்வை
ஒரு முறை ஏனும் ஒன்றை ஒன்று பிரிந்திட தாேன்றாத
வர்ணம் தீட்டாத அவள் உதடுகள்
துளை காெண்ட மூங்கிலை வருடி செல்கின்ற
காற்றின் ஓசை பாேல அவளது காந்த குரலும்
குனிந்த தலை நிமிராது நடந்து வரும் உண் அழகில்
அந்த தேவதைகளும் தலை குனியும்
அதிகன் வசந்தகுமார்