காதலால்

மேகத்திற்கு காற்று சொல்லும் காதல்
நீரானது
வானிற்கு நிலவு சொல்லும் காதல்
ஒளியானது
மண்ணிற்கு விதை சொல்லும் காதல்
பயிரானது
கணவன் மனைவிக்கு சொல்லும் காதல்
கருவானது
கருவிற்கு தாய் சொல்லும் காதல்
உறவானது
மலைக்கு நீர் சொல்லும் காதல்
அருவியானது
காதலுக்கு காதல் சொல்லும் காதல் காதலானது
அதுபோல்
இரு மனங்களுக்கிடையே மலரும் காதலையும்
காதலிப்போம்

அதிகன் வசந்தகுமார்

எழுதியவர் : அதிகன் வசந்தகுமார் (6-Oct-18, 7:18 pm)
சேர்த்தது : ATHIKANVASANTH
Tanglish : kaathalaal
பார்வை : 112

மேலே