ஏக்கத்துடன் பெண்
தூங்குகின்றேன்
துயில் எழுகின்றேன்.
ஆனால் ஏங்கிய மனம் ஏக்கம்
கலைக்கவில்லை.
உன்னை தாங்கிய இதயம்
சுமை இறக்கவில்லை..
கலங்கும் விழியும் கனவை
எதிர்க்கவில்லை....
நாளும் நகருது பொழுதும் புலருது
என் உளறல்கள் தொடருது
உன் வரவுதான் நழுவுது..