மல்லியை காட்டிக்கொடுத்த ரோசா

' என்னவனே, எங்கிருந்து
வருகிறது இந்த மல்லிகைப்பூ
மணம் உந்தன் மேனியில் இன்று
நான் தெரிந்துகொள்ளலாமா '
என்றாள் அவள் அவன்
அணைப்பின் இறுக்கத்தை
சற்றே தளர்த்தி...............
'பெண்ணே இதுகூட தெரியாதா
உனக்கு, உந்தன் கூந்தலின்
மல்லிகை மணமல்லவோ அது'
என்றான் அவன்.........அதற்கவள்
'என்னவனே என் கூந்தலில்
நான் வைப்பதோ ரோசாப்பூ
மட்டுமே, நீ அறிவாய் ............அப்படி இருக்க
உன்மீது வீசும் இந்த மல்லி மணம்.....????????
இப்போது அவன் பிடியிலிருந்து அவள்
முற்றும் விடுபட்டு ...............
என்னவா, இப்படி உன்னை நான் அழைக்க
நீ எண்ணினால், அதை மறந்துவிடு
உன்மீது பரவிய மல்லி மணம் ....அந்த மல்லி
மல்லி தந்த வரவை காட்டிக்கொடுத்துவிட்டதடா..
இந்த ரோசா இனி உன்னை
நம்பிடாதடா உன் பொய்யும் புரட்டும்
சென்றுவா இனி நான் உன்னவள் இல்லை
மல்லி உனக்கு காத்திருப்பாள் ... என்று கூறி
அவன் பொய்க்காதல் பிடியிலிருந்து விடுபட்டாள்
வேடன் பிடியிலிருந்து விடுபட்ட கிளிபோல்.
அவள் பறந்து போனாள்..............
சுதந்திர பறவையாய்.,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Oct-18, 5:02 am)
பார்வை : 75

மேலே