காலம் மாற, காதல் முறையும் மாறுதோ

அன்று காதலன் காதலிக்கு
மடல் எழுத அதற்கு அவளும்
பதில் மடல் வடித்தாள்-காதலர்க்கு
இலக்கிய ஈடுபாடு இருக்க
மாடல்களின் வரிகள்
கவிதையாய், காவியமாய்
கதையாய் இருந்தன
அதை ஒருவர் மற்றோருவர்
படிக்க படிக்க உள்ளத்தில்
எழுதியவர் உருவம் வடிவெடுக்க
அதுவே மடல்களின்மேல்
ஓவியமாய் பிம்பமாய் மாறி
மடல் படிக்கும் காதலர்க்கு
இன்ப உணர்ச்சி தந்தது

இன்று ..... வாட்ஸப்பில் ....
நொடிப்பொழுதில்
காதலர்கள் உருவங்கள்
பரிமாற்றம்.....எஸ்.எம்.எஸ்
தான் இவர்கள் மடல்கள்
எத்தனாயிருந்து , நேரமும் இருக்க
எஸ்.எம்.எஸ். கிறுக்கல்கள்
இலக்கியமாய், காதல் இலக்கியமாய்
அமையுமாம் ...........

அந்த காதல் காதலா
இந்த காதல் காதலா
யார் தருவார் பதில் இதற்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Oct-18, 12:03 pm)
பார்வை : 105

மேலே