அன்பே அன்பே

வணக்கம் அன்பு நண்பர்களே..... சகோதர சகோதரிகளே......

மீண்டும் உங்களுடன் என் வரிகளுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி......

நீங்கள் மனதில் நினைத்ததை நினைவு கூறுவதில் மனதிற்கு மிக்க மகிழ்வு.....

தொடரும் நினைவுகள்.......

நம்ம நிறைய நினைப்போம் , நல்லது பண்ணனும், உதவி செய்யனும்னு ஆனா இதலாம் பண்ணா யாராவது எதாவது நினைப்பங்கானு எந்தவொரு செயல் செய்யும்போது ஒரு தடைகல் வந்து நின்றுடும்.....

அப்புறம் மனசுல எங்கையாவது ஒரு ஓரத்துல அது போய் நிக்கும்..... செய்யலாமா வேணாமானு யோசிச்சு நாட்கள் மட்டும் வாரங்களாய் மாறி ... காணாம போய்டும்...( காணமல் போன மலேசியா விமானம் மாதிரி....)

நல்லதா...? கெட்டதா...? செய்யாமலே அந்த செயலுக்கு குழி வெட்டி மண்மூடி மூலையில புதைச்சுடுவோம்.......

அப்புறம் நமக்கு வருகிற கஷ்டத்துல அந்த எண்ணம் (உதவி) காற்றுல பறக்குற பஞ்சு மாதுரி காணாம

போய்டும்.....

ஆறறிவு படைத்த , மனிதன் தான் நமக்கு ஆறறிவு மாற்ற விலங்குகளுக்கு ஐந்தறிவுனு பெருமிதம் கொண்டு அடிமை படுத்துறான்.....

ஆனா எந்தவொரு விலங்கும் காசு. பணம் நகை நட்டு வேலை நல்ல உணவு , துணி , போன் , கார் வேணும்னு பறக்குறது இல்ல.....

ஆறறிவு படைத்த மனிதன் தான் நிம்மதி இல்லாமல் எட்டு திக்கிலும் பறக்குறான்......

ஐந்தறிவு பதைத்த விலங்கு அடிமைகளாக இருப்பதை விட ஆறறிவு படைத்த மனிதன் தான் பணத்திற்கும் , தேவைகளுக்கும் அடிமையாய் இருக்கிறான்........

என்னடா எல்லாருக்கும் தேவைகள் இருக்கத்தான் செய்யுது அதுக்குகாக உங்களை நினைக்க வேணாம் , செயல் படுத்த வேணாம்னு சொல்லல , உலகத்துல எத செய்யணும்னாலும் நல்ல நம்பிக்கையும், மன நிம்மதி அப்புறம் தான் பணம் மற்றது எல்லாம்.... ஆனா நமக்கு பணத்தோட தேவைகள் தான் அதிகமா இருக்கு பணம் இருந்தால் தான் எல்லாரும் மனிதனாய் மதிக்குறாங்க........

பணம் இருக்கும், மலை போல மளிகை இருக்கும் , வந்தா காரு , போன காருனு சுத்தற பணக்காறவங்களுக்கும் எதாவது ஒரு குறை இருக்கும் .... நிம்மதி இல்லாத வாழ்க்கையதான் வாழ்வாங்க......

கஷ்டம் இல்லதா வாழ்க்கை யாருக்குமே இல்ல...... நாம தான் கஷ்டத்தை கடந்து வாழ்கையை வெல்லனும் .....


"எளிதில் கிடைத்த வெற்றி மனதில் நிக்காது" அதுனால தான் வெற்றி கனி பல தோல்வி காய்களைக் கடந்து நம் கையில் கிடைக்கிறது....

எந்த ஒரு செயலோ (வேலையோ,, முடிவோ) நம்மால் முடியும் , நம்மை விட அழகாக யாரால பண்ணமுடியும்னு மனசுல நினைச்சு செஞ்சு பார்க்கணும் நம்மை விட மனவலிமை மேன்மேலும் அதிகரிக்கும்....

நம்மள எப்பவும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்காதீங்க....... நம்மால் முடியும்,,, என்னாளையும் "அழகாக இதை மன நிறைவாக செய்து காண்பிக்க முடியும்" என மன உறுதி வேணும்.....

சொல்றது ஈஸி செஞ்சு பார்த்ததான் அதோட கஷ்டம் தெரியும் இதை காதால் கேட்காமல்.... கடக்க இயலாத கணவன்மார்களோ , குழந்தைகளோ இருக்க இயலாது இது நம்ம அம்மா (அ) மனைவிமார்கள் சொல்லும் வார்த்தை....

அவர்கள் சொல்வதும் உண்மை தான் மத்தவங்க எளித அறிவுரை சொல்லிடலாம்... மத்தவங்களுக்கு எதாவது ஒரு ப்ரோப்ளம்னா அதுக்கு தீர்வு , வழி சொல்லனும்னா நமக்குள்ள பெரிய மேதை வந்துடுவான்.... இதே நமக்கு ஒரு பிரச்சனைனா அவ்ளோ தான்.....?

கஷ்டத்தை அனுபவிக்குறவங்களுக்கு மட்டும் தான் அதோட வலி தெரியும்....

அவர்களுக்கு ஆறுதலை நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை சொல்லி பாருங்க மகிழ்ச்சியால் அவர்கள் மனம் துள்ளும்.......

சின்ன குழந்தை கீழ விழுந்துட்ட கொஞ்சம் அழும் ஆனா மறுபடியும் எந்திரிச்சு நடக்கமா இருக்காது.......

அது மாதிரி தான் நாமும் கத்துக்கணும் நம்மளோட முதுகு எலும்பின் உதவியால் உலகிற்கு நன்மை செய்யும், மகிழ்ச்சியை தரும் மனிதனின் முதுகெலும்பாய் நாம் வாழ்வோமகா.......

நன்றி மீண்டும் சந்திப்போம்.........

நிறைவு பெறாத என்னுடைய எண்ணத்துடன்.......

எழுதியவர் : மஞ்சுகீதாநாதன் (8-Oct-18, 7:04 pm)
சேர்த்தது : பிரிய சகி
Tanglish : annpae annpae
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே