உன் காதல் பார்வை
அன்பே, உன்னைப் பார்க்குமுன்
இருந்த நான் வேறு; இனி நீ
பார்க்கப் போகும் நான் வேறு.
நான் செய்த எந்தச் செயலுக்கும்
நான் வருந்தப் போவதில்லை;
நான் செய்யாத எந்தச் செயலுக்கும்
நான் வருந்தத் தேவையில்லை.
நான் செய்ததெல்லாம்
நன்மைக்கென்றே நம்புகிறேன்;
உன் காதல் பார்வை பெற்றபின்
அனைத்தும் நன்றாகவே நடக்கிறது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
