அவள் பார்வை

துப்பாக்கி ரவையால் சுட்டால்
உயிர்ப்போகும்- கண்ணே உந்தன்
பார்வை சுட்டுவிடுதே கொல்லாமல்
என் நெஞ்சை உன் வசமாக்கிவிடுதே
என்னென்பேன் உந்தன் விழிவழி
ஊடுருவரும் சக்தியை இந்த
அற்புத 'ஆக்க சக்தியை' அந்த
'சக்திதான்' இந்த சக்தியை
பெண்ணின் விழிக்குள் பூட்டி வைத்தாளோ!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-18, 7:42 am)
Tanglish : aval parvai
பார்வை : 205

மேலே