உலகம் போரப்போக்கு

இன்று பெரும் பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்
'லேப்டாப்', 'இணைய தளம், இவைகளின்
உதவியின்றி ஆசிரியர்களுக்கு
கல்வி போதனையோ
உரையாற்றலோ செய்ய இயலுவதில்லை

அலுவகங்களிலும் நிலை இதுவே
'கம்ப்யூட்டர், இணைய தளம்
இல்லை என்றால் பணிகள் ஏதும் நடவாது

இத்தனையேன் இன்றைய அவசர உலகில்
பணிமீது பறக்கும் கணவன், மனைவி
வீட்டில் குழந்தையிடம் செல்லமாக
விட்டுச்செல்வது ஐ-பாடு.....அதில்
குழந்தை நாள் முழுவதும் பார்ப்பது
கார்ட்டூன், .............கார்ட்டூன், இன்னும் கார்ட்டூன்

காதலர்கள் காதல் மொழி பரிமாற்றம்
கொஞ்சி விளையாடுதல் இன்று
கைப்பேசி துணை இன்றி இயங்காது



இப்படியே போனால் ஒரு நாள்
ஏதோ ஒரு இயற்கை செயலாலோ
கோளாறாளோ இல்லாமலே போய்விட்டால்
உலகம் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்து பார்த்தேன்


தினம் தினம் உதித்து மேற்கில்
மறைகிறான் நம்மை வாழவைக்கும் ஆதித்யன்
நாம் அவன் நாளை காலை கீழ்வானில்
மீண்டும் வந்துதிப்பான் நமக்காக என்று
நாம் நிம்மதியாய் நித்திரையில்.............அவன்
மறுநாளிலிருந்து உதிக்க மறந்துவிட்டால்
உலகு என்னாவது ? ஸ்தம்பித்துவிடும் அல்லவா

அதே கதிதான் இன்று மக்களுக்கு
இந்த நவீன இணைய தளம் இல்லாமல்
போய்விட்டால்...............
,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Oct-18, 7:30 am)
பார்வை : 67

மேலே