காற்றின் சங்கீத மொழி

நீ கையசைத்து
காற்றுடன் பேசுகையில்
தன் முன்ஜென்ம
ஞாபக அலையில்
காற்றும் கொஞ்சம்
காலம் முன்னோக்கி
முன்னேறியது ...

தன் ஆதி அணு
சங்கீத சம்பந்தம்
கொண்டதாய் கண்டுகொண்டது ...

தனக்குள் சங்கீத ஞானம்
தன்னிகராய் தனித்திருப்பது
தன் மனம் கண்டு கொண்டு
மெய்யாலே மெய்சிலிர்த்தது ...

உன் கையசைவின் வீச்சு
காற்று வீச்சுடன் உரசி
புது சங்கீதம் ஒன்றை
காற்றின் அலைவரிசையில்
ஒலிபரப்பியது...

காற்றின் வீச்சு
உன் கைகள் உரசியதும்
செல்லமாய் ரீங்காரித்தது...!!

எழுதியவர் : குணா (10-Oct-18, 3:27 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 86

மேலே