காதல்

அளவிலா காதல் உள்ளத்தை
வந்தடையும் எப்போது
தாய்க்கு தன் குழந்தையை
மார்போடணைத்து கொஞ்சும்போது
கொஞ்சும் சிசுவிற்கு அதன் பசி தீர
அன்புடன் தாய்ப்பால் ஓடும்போது

அளவிலா காதல் உள்ளதை
வந்தடையும் எப்போது -இறைவன் மேல்
உயிருக்கு ஏற்படும் பக்தி பெருக்கெடுக்க
எப்படி அன்று வேடுவன் கண்ணப்பன்
சிவ லிங்கத்தில் உள்ளதால் இறைவனைக் கண்டு
கொண்டு, அந்த லிங்கத்தை கண்களில் இரத்தம்
தன் கண்ணையே அம்பால் பிடுங்கி அதற்கு
இட்டு, அடுத்த கண்ணிலும் இரத்தம் கசிய, சற்றும்
யோசிக்காமல், தன் இரண்டாவது கண்ணையும்
அம்பால் நொண்டி எடுக்க எத்தனிக்க ......மீதி கதை
யாவரும் அறிந்ததே

அளவிலா காதல் உள்ளத்தை வந்தடையும்
எப்போது, உள்ளம் உள்ளத்திலே இறைவனை
பக்தியால் கண்டு கொண்ட பின்னே- பின்னே
பார்க்கும் பொருளெல்லாம் அவனே என்ற
அளவிலா காதல் வந்தடையும்.......கண்ணனையே
தன் மணாளனாய் கண்டாள், ராதை....
அவனே தன் ரங்கன் என்று கூறி அவனுடன்
ஒன்று கலந்தால் கோதை நாயகி.....
பின்னர் அப்படியே மீரா ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (14-Oct-18, 12:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே