நீ தான் வேண்டும் பெண்மானே

மனம் ரசிக்கும் பூந்தென்றல் காற்று
தினம் ருசிக்கும் தேன்சுவை ஊற்று
பற்கள் வெண் முத்துக் கற்கண்டு
இவள் மணக்கும் முல்லை பூச் செண்டு
நடையில் ஓடி விளையாடும் பெண்மான்
கண்ணில் துள்ளி அலைமோதும் கயல்மீன்
இதழ்கள் இனிக்கும் அல்போன்சா
வனப்பில் இவள் என்றும் திராவிட மோனாலிசா
அஷ்றப் அலி