பூமிக்கு வந்தால் கண்மணி
தொட்டில் அரியணை...
அட்டினக்கால்...
ஆட்டி விட அடிமைகள்..
அழுகையால் கட்டளை...
பூமிக்கு வந்தால் என் கண்மணி...
எச்சில் தீர்த்தம்..
உதையால் முத்தம்..
பெயர் இல்லா பதுமை என் கண்மணி..
ஒருதலைக்காதல் உன்மேல்..
ஓயாத ஆசை உன்மேல்..
துணியால் சுற்றிய துண்டு நிலா என் கண்மணி..
இரவெல்லாம் விழிப்பதால் வெண்ணிலா இவளோ..
அழுகையிலும் இசைக்குதே பூபாலன் குழலோ..
ஈரடி கோவக்காரி.. கண்ணத்தில்
அரையடி மருதாணிக் கைக்காரி..