காலம் வென்ற கலாம்

இலட்சத்தை முந்தி முளைத்தாய் !

இலட்சியத்தை என்னுள் விதைத்தாய் !

விதையாய் மண்வீழ்ந்து தோன்றி

விண்ணை விஞ்சும் ஆலமானாய் !

விழுதாய் மீண்டும் கீழ்வீழ்ந்து

பழுவின்றி பிறர்வாழ வழியானாய் !

கனாக்கண்ட தோழமையை தேர்த்தி

கண்டவற்றின் மெய்பொருள் உணர்த்தினாய் !

சாதிமத சாயலில் வெந்தோனிடையில்

சாகாவாய் தனினின்று வென்றாய் !

இளையோனை ஏளனமிட்டோனிடையில் இவனே

எதிர்கால வளர்ச்சியென சாமரமிட்டாய் !

என்கணை திறந்தயாமே இந்நாட்டின்

ஏவுகணை நாயகனாய் திகழ்ந்தாய் !

அரிதாரம் பூசிப்புகழும் பொய்யோனைவிட

அரிதாக தரப்புரியு மெய்யோனானாய் !

இராமனாதனால் நினைந்த நின்னடித்தளம்

இனியுன்னால் உன்னினைவுச் சின்னமாய் !

சிறுபேறு செய்துப் புகழெய்வோனிடையில்

பெருபேறடைந்து தன்னடக்க ஒளியானாய் !

நிழலறையில் கடந்த இளைப்பொழுதை

நிஜமறிந் துனைப் பற்றினோமய்யா !

எவ்வுயிர்க்கும் இரங்காத காலனும்

இப்புண்ணுயிர்ப் பறிக்க தடமாறுவான் !

நால்வர் நடத்தும் மானுடயிருதிக்கு

நின்பட்டாளம் திரளாய் நின்றுயேந்தினோமய்யா !

ஆசனாய் நண்பணாய் எமையேந்தினாய்

கைப்படி இயலாது யெம்மால்

இயன்றவரை நின்னறவழிப் போற்றி

உன்கனவை மெய்யிட்டு அறம்புரிவோம் !



- கலாம் கண்ட கனாவை நோக்குவோன்

மா - சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (15-Oct-18, 9:37 pm)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 65

மேலே