அணையாவிளக்கு

வீட்டுக்கு தலை மகனானான்./
நாட்டுக்குத் துணை மகனானான். /
துடிக்கும் கரங்களிலே
தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கி எடுத்தான் ...!/
கொடுத்த கடமையில் கண்ணும் கருத்துமானான்./

எல்லைப்பகுதிக்கு காவலன் ஆனான்./
எதிரியை கண்ணுற்றான் /
நாட்டை இமைபோல் காத்தான் ../
தன் இல்லம் மறந்தான்/
தூக்கம் வெறுத்தான் ....!/
இல்வாழ்க்கை ஒளி ஏற்ற வெறுத்தான்./

தினம் ஜெய்ஹிந் என உரைத்தான்./
விழி போல் தமிழ் மொழியை நேசித்தான்./
நாட்டுக்காக தன் விழியையும் இழந்தான் ../

இருளால் சூழப்பட்ட. பகுதியிலே வாழ்வைக் கடந்தவன்/.
இறுதியில் பேச்சு இழந்து மூச்சு இழந்து உயிர் திறந்தான் தேசத்துக்காகவே /
அன்னை அணைத்து அழுகிறாள் /
அணையாவிளக்கு விடி விளக்காக அவன் /
பூதவுடலுக்கு நின்று எரிகிறது இன்று ....///

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Oct-18, 5:36 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 70

மேலே